பிரித்தானிய பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து, ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் காவல்துறையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த பிரித்தானிய பெண்ணின் ஹட்டன் யை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார்.

தனது நிதி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலா காவல்துறையிடம் குறித்த பெண் முறையிட்டுள்ளார்.

 இதனையடுத்து அது தொடர்பில் ஹட்டன் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர் தேடுதல் நடவடிக்கைளின் பின்னர் சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர் கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here