அளுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
பொலிசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக இறந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்ததுள்ளது.
கொலைக்குப் பிறகு, இறந்தவரின் கணவர் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல்துறையிடம் சரணடைந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அளுத்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.








