பெயரை மாற்றி மாற்றம் என்ற கோசத்துடன் மக்களிடம் வந்தால் ஒருவரின் குண இயல்புகளும் வரலாறும் மறைக்கப்பட்டுவிடும் என்றோ மாற்றம் வந்துவிடும் என்றோ அர்த்தமல்ல.
அது யாழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீட்டப்படும் இரகசிய சதிவலை என்று தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகர சபை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை முன்னெடுத்த தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகர சபை வேட்பாளர்களான நிருஜா தர்சாந், ஜெகதீஸ்வரன் மயூரன் மற்றும் முகமட் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது இவ்வாறு கூறிய அவர்கள் மேலும் கூறுகையில் –
தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கு முன் ஒரு தடவைக்கு பலமுறை சிந்தித்து வாக்களிப்பது அவசியம்.
உள்வீட்டு பிரச்சினையில் அயல் வீட்டார் நுழைவது சரியானதொன்றல்ல. அதேபோன்றுதான் எமது கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாம் பேசித் தீர்மானிப்போம்.
தமிழ் தேசிய கூட்டு என்று இருந்து நாம் பட்ட வலிகள் ஏராழம். அதன் விளைவாகவே நாம் இன்று தனித்துவமாக போட்டியிடுகின்றோம்.
அபகீர்த்தியும் சேறடிபும் எம்மீது பூசப்படுவது தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று.
இதை மக்கள் புரிந்துகொள்வது அவசியம்.
(யாழ் நிருபர்:- விஜய்குமார் லோஜன்)








