மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபாய் சம்பள விடயத்தில் நீதிமன்றத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மூக்கறுந்து போய்யுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  வர்த்தமானி ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,700 ரூபாவாக பிரகடனபடுத்தியுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தடை உத்தரவினை கோரிய போதும் அந்த தடை உத்தரவினை நீதிமன்றம் நிராகரித்ததுள்ளதையடுத்து தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை வழங்கியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதுடன் அவ்வாறு இந்த சம்பளத்தினை வழங்காவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்கள் பெருந்தோட்டங்களை அரசாங்கத்திற்கு வழங்கிவிட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வியின் சீர் திருத்தபணியில் இருந்து நாங்கள் தீவிரமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றோம் இந்த சீர் திருத்த பணி வெகுவிரைவில் அமுல்படுத்தவிருக்கிறது. அவ்வாறு அமுல்படுத்தபடும் போது எமது நாடு கல்வியில் ஒரு பாரிய மாற்றத்தை கொண்டிருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here