மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய வீதி விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (3/16/2025) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனார்.
காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டு நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கு பிரயாணித்த பஸ்வண்டி கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பிரயாணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பிரயாணித்த மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் பேருந்தின் சாரதியை கைது செய்துததுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








