ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர்த்து வேறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அதனை எதிர்த்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here