எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் உள்ள ஆர்வத்துடன், வரும் ஆண்டுகளில் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர விரும்புவதாகவும், அதனால் தான் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








