கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ்  போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பரந்தன் குமரபுரம்  பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20 .7 கிராம் ஐஸ் மற்றும் 5கிறாம் 75மில்லிக்கிறாம் ஹெரோயின் என்பன கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

[கிளிநொச்சி  நிருபர் – பரமசிவன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here