குருணாகல் பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குருணாகல் மெஹிஎல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 1 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 950 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ரிதிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here