ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இபலோகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இபலோகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கல்நெவ பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டு விசாரணையில், அவர் சில இடங்களில் வாட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







