அநுராதபுரம், மதவாச்சி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய நபர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here