கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 731 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here