குறைந்த நேரத் தொழில்களுக்கு அதிக வேதனம் வழங்குவதாக உறுதியளிக்கும் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு இது தொடர்பில் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மோசடிகளை மேற்கொள்வோர், இணைய விளம்பரங்கள் மூலம் தனியாட்களைக் குறிவைத்து, போலியான தொழில் வாய்ப்புக்களுக்காகப் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையைக் கோருகின்றனர்.

இந்தநிலையில், தொழில் மோசடிகளை எவ்வாறு அடையாளம் கண்டு தவிர்ப்பது என்பது குறித்து மக்களுக்கு தெளிவூட்ட இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு சமூக ஊடக பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here