கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கையிலிருந்து நேற்று வியாழக்கிழமை (05.12.2024) பிற்பகல் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







