ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவும்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளார்.

மேலும் புத்தாண்டுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பெரமுனவுடன் இணைய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போது எந்தத் தடையும் இல்லாததால், பொதுஜன பெரமுனவில் இணைவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here