நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்த 83, பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து துவக்கப்பட்டது. இதில் பயணம் செய்யும், பயணியர் மகிழ்ச்சியுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேஷன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர்.

3 மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேஷன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கியதால், இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here