தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடாத்தி மக்களின் ஐனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவித்து அதனை நிறுத்தியது.
இவ்வாறு காலத்தை இழுத்தடிக்காமல் மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக நடத்தப்பட வேண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் உடனடியாக தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்பதே என தெரிவித்தார்.
தொடர்ந்து கட்சியின் வழக்கு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.






