இலங்கை மத்திய வங்கி, தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29ஆம் திகதி ரூ.2000 பெறுமதியிலான ஞாபகார்த்த நாணயத் தாளை வெளியிட்டுள்ளது.
புதிய நாணயத் தாளை சீராகப் பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், தங்களின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை மேற்கொண்டு வருகின்றன.
இந்த செயல்முறை முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத் தாள் வர்த்தக வங்கிகள் மூலமாக படிப்படியாக பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும்.
இந்நிலையில், அளவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும், அனைத்து வங்கிகளிலும் புதிய நாணயத் தாள் தங்குதடையின்றி பயன்படுத்தப்படுமென மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.








