இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன, கடலோரப் பாதையில் இயங்கும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பணியில் இருக்கும் போதே போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ வகை போதைப்பொருட்கள் கடலோரப் பகுதிகளில் எளிதில் கிடைக்கின்றன என்றும், சிலர் அவற்றை பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நடத்துநர்கள் பயணிகளுக்குக் கொடுக்க வேண்டிய மீதிப் பணத்தை மறைத்து வைத்து, அதை பெரும்பாலும் போதைப்பொருள் பழக்கத்திற்குப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

கொள்ளுப்பிட்டி, தெஹிவளை, மொரட்டுவ, களுத்துறை நோக்கி இயங்கும் பேருந்துகளுக்கு விநியோகஸ்தர்களால் போதைப்பொருள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பில் பேருந்துகளைச் சோதனையிட்ட காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here