அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மோதல்கள் தொடங்கியதை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

அதன்படி WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 85.54 ஆக (2.57) சதவீதம் அதிகரித்துள்ளது. பிரென்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 90.60 ஆக (2.84 சதவீதம்) அதிகரித்துள்ளது.

இதனுடன் மர்பன் வகை எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையும் அமெரிக்க டொலர் 95.75 ஆக அதிகரித்துள்ளது. அதன் அதிகரிப்பு வீதம் 4.04 சதவீதமாகும்.

கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அமெரிக்கா, ஈரானின் லாரக் தீவு மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரான் ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க முகாம்கள் மீது பெலிஸ்டிக் தாக்குதல் நடத்தியுள்ளது.

இவ்வாறு மத்திய கிழக்கில் தொடங்கியுள்ள புதிய போர் மோதல்களின் காரணமாகவே மசகு எண்ணெய் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here