யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நேற்று (30) பிற்பகல் பரிசோதனை குழுவொன்று வருகை தரவுள்ளதால் அலுவலக வளாகத்தை சீர் செய்யுமாறு கிடைத்த தகவலை அடுத்து கடமைக்கு சமூகமளித்திருந்தார்.

அவர் அலுவலக வளாகத்தில் உள்ள மூலிகை தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தின் பின் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் நிசாந்தன் சிந்துப்பிரியா  (வயது 37) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here