கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகளிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை, வவுனியா, பமுனுவ , நொச்சியாகம மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21, 34, 36, 37 மற்றும் 44 வயதுடைய ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








