மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்த முன்னாள் இரரஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்பு மனு நேற்று வெள்ளிக்கிழமை (11) நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன்  அறிவித்தார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு ஏற்பு மற்றும் சின்னம் வழங்குவதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது வேட்புமனு செய்த கட்சிகளின் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கும் நடவடிக்கையின் போது  ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் தலைமையில் தாக்குதல் செய்த வேட்பு மனுவில் சத்திய கடதாசி இணைக்கப்படாதலால் அந்த வேட்பு மனு  நிராகரிக்கப்பட்டது என அவர் அறிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் கடந்த 2015 ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுசின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான இவர் 2020 ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி ஸ்ரீ பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகிய இராஜாங்க அமைச்சரான இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ள நிலையில் 2024 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை சுயேச்சைக் குழு ஒன்றின் தலைமை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யாது போட்டியிடும் 3 வது நபர் வேட்பு மனுதாக்கல் செய்ததையடுத்து அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஒரு கட்சி 6 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here