மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த மீன் ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டு இரு பாரிய சம்பவங்கள் இன்று புதன்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றினுள் சம்பவதினமான இன்று காலையில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் ஏற்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தடன் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த மீன் ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று வீதிகட்டுப்பாட்டை மீறி பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலை முன்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனசாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவங்களையடுத்து மக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மட்டக்களப்பு நிருபர்-கனகராசா சரவணன் )






