மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

திருமண வைபவத்திற்கு செல்வதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் நிகழ்வுகள் தற்போது நிறைவடைந்திருக்கும் என நம்புவதாகவும், தற்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இல்லை எனவும் சுட்டிக்காட்டிய விஜித ஹேரத், அதனால் அவரை நீதிமன்றத்திற்கு அழைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்போது அவரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.

அதன் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் பார்ப்போம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here