ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) பிரதம பிரதிநிதி யமடா டெட்சுயா, சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார்.
JICA மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை உடனடியாக தொடங்குவது குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
அண்மையில் ஜனாதிபதியின் செயலாளருடனான சந்திப்பின் போது, ஜப்பானிய தூதுவர், JICA இன் ஆதரவுடன் நடைபெற்று வரும் 11 திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இன்றைய கலந்துரையாடல் இந்த முயற்சிகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை மையமாகக் கொண்டது என மேலும் தெரிவித்துள்ளார்.







