விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு இன்று (1/17/2025) பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக திசர இரோஷன நாணயக்கார டிசம்பர் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here