ஜா-எல, படகம பிரதேசத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை (09.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, அதன் காரணமாக அவரது சகோதரர் தலையிட முயன்றார், ஆனால் அவரது கணவர் அவரைத் தள்ளினார், இதனால் கீழே விழுந்ததில் காயங்கள் ஏற்பட்டன.

கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் 33 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here