மன்னார் (Mannar) –  பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (18.05.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புதையல் தோண்டிய நிலையில், புதையல் தோண்டும் உபகரணங்கள் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை அதிகாரி எனவும் ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள், ஸ்கேனர் இயந்திரம் என்பன பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here