மன்னார் தள்ளாடி  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை ( STF) அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது நேற்று செவ்வாய்(25.09.2024) மாலை மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம் பிட்டி பகுதியில் இடம்பெற்றது.

குறித்த  நபரால் விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட  3 கிலோ 570 கிராம் அவரது இல்லத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here