மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாகவும் அதிக மழை காரணமாகவும் 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பைகடவை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 1100 ஹெக்டேர் விவசாய நிலங்களும்  மாந்தை பகுதியில் 1168, நானாட்டான் 768 ஹெக்டேயருமாக ஒட்டு மொத்தமாக 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளன.

இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கு என 11776 ஹெக்டேர் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 4173 ஹெக்டேர் விவசாய செய்கை மாத்திரம் தற்போது பகுதி அளவில் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இம்முறை விவசாய செய்கைக்காக பல விவசாயிகள் அரச மற்றும் தனியார் வங்கிகளிலும், கிராம மட்ட அமைப்புகளிடமும் கடன்களை பெற்றுள்ள நிலையில் அவற்றை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தள்ளுபடி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

  • மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here