நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் மரண வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து மரண இல்லம் உள்ள வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மின்விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வயர் வீதியில் இருந்த உயர் மின் கம்பியில் மோதியதில் குறித்த நபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த நபர்  திஹாரியா கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதானவர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஏனைய நால்வரும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here