சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைளை மருதானை பொலிஸார் பறிமுதல் செய்து, குறித்த பொருட்களை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதுநடவடிக்கை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







