Tuesday, June 9, 2026
No menu items!

மருதானை

மருதானையில் 950 கிலோ மஞ்சள் மற்றும் 2,562 வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல் – ஒருவர் கைது!!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைளை மருதானை பொலிஸார் பறிமுதல் செய்து, குறித்த பொருட்களை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைதுநடவடிக்கை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கொழும்பு விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த பெண்!

கொழும்பு, மருதானை-டெக்னிக்கல் சந்தியிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேற்று மதியம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு குறித்த பெண், ஆண் ஒருவருடன் விடுதிக்கு சென்ற நிலையில் குறித்த நபர் அங்கிருந்து வெளியேறிய போதும் மீண்டும் திரும்பி வரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பின் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்ணின்...

மருதானை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது கொலையா? தற்கொலையா?

மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார் . மருதானை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் பெண்ணின் தற்கொலை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த செய்திக் குறிப்பில், கிளிநொச்சியைச்...

காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மருதானை காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள்-சுனில் ஹந்துன்நெத்தி..!

அடுத்த இரண்டு வருடங்களில், பசுமை எரிசக்தி கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்யப்படும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். மருதானையில் உள்ள VEGA இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறையை ஆய்வு செய்ய சென்றிருந்தபோதே அமைச்சர்...

தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு..!

களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு (05) தொடருந்தொன்று தடம் புரண்டுள்ளது. மருதானையில் இருந்து களுத்துறை தெற்கு நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகக் கரையோர மார்க்கத்தின் ஒரு வழித் தடம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் மோதி 03 வயதுடைய குழந்தை பலி!

நேற்று மதியம் மருதானை பிரதேசத்தில் 03 வயதுடைய குழந்தையொன்று அவரது குடியிருப்புக்கு அருகில் வாகனம் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் தந்தை தமது வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை பின்னோக்கிச் சென்றதாகவும், வாகனத்தின் பின்னால் சென்ற குழந்தையின் மீது தவறுதலாக மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தில் தீப்பரவல்!

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவை தடைப்பட்டிருந்ததுடன், தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.    

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமடையக்கூடும்; ரயில்வே திணைக்களம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும்...

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிமுல்ல மற்றும் அளுத்கம பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img