90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
NMRA இன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சட்ட நடவடிக்கைகளால் பல மருந்து நிறுவனங்கள் தடைகளை எதிர்கொண்டுள்ளன.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து மருந்துகளுக்கான விலை குறைப்பு காலதாமதமின்றி அமல்படுத்தப்படும் என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.








