மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து ; 17 பேர் பலி ..
இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தின் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மருந்து தொழிற்சாலையில் நேற்று புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த வேளையில், மதிய உணவு நேரத்தின்போது மருந்து தொழிற்சாலையின் ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்துள்ளது. மேற்படி தீ விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதுபற்றிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை அவர் இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.








