கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று (அக்டோபர் 14) நடைபெற்ற இலங்கை–நியூஸிலாந்து 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்கள் எடுத்தது. இதில் நிலக்ஷிகா சில்வா 28 பந்துகளில் 55 ஓட்டங்களை செய்து அரைசதம் எட்டினார். அணி தலைவர் சாமரி அத்தபத்து 72 பந்துகளில் 53 ஓட்டங்கள் சேர்த்தார்.
பந்து வீச்சில் சோஃபி டெவின் 54 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ப்ரீ இல்லிங் 39 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்னிங்ஸுக்குப் பிறகு மழை இடைவிடாது பெய்ததால், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டது. இறுதியில் அதிகாரிகள் ஆட்டத்தை இரத்து செய்ய முடிவு செய்தனர்.
இதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. இந்நிலையில் இலங்கை அணி 4 போட்டிகளில் 2 புள்ளிகள், தரவரிசையில் ஏழாவது இடமும் நியூஸிலாந்து அணி 5ஆவது இடமாக புள்ளிபட்டியலில் காணப்படுகிறது.







