மஹரகம பகுதியில் 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் உடன், ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதுகள், களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
முன்னதாக, எண்டெரமுல்ல பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விசாரித்தபோது கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, இவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








