மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மாகாண எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பிறகே தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
எதிர்க்கட்சித் எம்.பிக்கள் மாகாண சபைத் தேர்தல் குறித்த கேள்விகளை எழுப்பியபோது பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், அரசு அதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.








