Tuesday, June 23, 2026
No menu items!

சுவாச நோய்

வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் – COVID குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை!

சுவாசக் கோளாறு காரணமாக ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மாத்திரம் வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர் அனில் ஜெயசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல் அல்லது சளி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பயந்து வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அது குறித்து வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், COVID-19, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அனைத்து சுவாச நோய்களிலிருந்தும்...

நாட்டில் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் நோய்கள் பரவி வருவதனால் குழந்தைகளின் ஆரோக்கியம்...

மாணவர்களிடையே பரவும் சுவாச நோய்கள் – புதிய வைரஸின் தாக்கமா?

புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிவுள்ள நிலையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா, பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள்...

மீண்டும் வைரஸா? அச்சத்தில் சீனா..!

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருவதோடு இது கொவிட்-19 அறிகுறிகளைப் போலவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வைரஸானது 14 வயதுக்குட்பட்டவர்களை...

வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் சிறுவர்களின்   எண்ணிக்கை அதிகரிப்பு..

நாளாந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் சிறுவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சுவாச நோய்களுக்கான சிகிச்சையாக ‘இன்ஹேலர்’ களை பயன்படுத்த...

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ள மாணவர்கள்!!!

13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 3.7 வீதம் பேர் புகைப்பிடிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img