250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதணி வவுச்சர் திட்டத்திற்கு பதிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர்தர பாதணிகள் வழங்கும் புதிய முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 1,266 பாடசாலைகளில் கல்வி கற்கும் 145,723 மாணவர்களுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாதணிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு சோடி பாதணியின் விலை ரூ.2,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வருட உத்தரவாதத்துடன் உற்பத்தியாளர்கள் அவற்றை வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அரசாங்கத்திற்கு சுமார் ரூ.140 மில்லியன் இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, அந்தச் சேமிப்பை பயன்படுத்தி மேலும் 62,481 மாணவர்களுக்கு கூடுதல் பாதணிகளை வழங்க முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








