மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டு/நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயம் ( தாந்தாமலை ) பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை வரலாறு விழுதுகள் அமைப்பின் தலைவர் த.ஐங்கரன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். இன்று (14.12.2024) சனிக்கிழமை காலை 10.30மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது தாந்தாமலை பிரதேசத்தின் 100 மாணவர்களுக்கான கல்விக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கற்றலில் அதிகம் ஆர்வமுள்ள , பின் தங்கிய குடும்ப நிலையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது வரலாறு விழுதுகள் அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள்,நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கல்விக்கான பணிகளை தொடர்ச்சியாக வரலாற்று விழுதுகள் அமைப்பினர் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here