சிலம்பம் போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தியா, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள திண்டுக்கல்லிலிருந்து 45 மாணவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.
வந்திருந்த மாணவர்களில் சிலர் வேளாங்கண்ணி கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர். அவர்களுள் விஷ்வா மற்றும் வீரமலை ஆகிய மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இரு உடல்களையும் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







