அரச சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்ன அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையானது ஜனவரி 1, 2025 முதல் பொதுச் சேவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க பரிந்துரைக்கிறது.

இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு திறைசேரி உறுதியளித்துள்ளதாக உதய ஆர்.செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் வருமானத்தையும் அதிகரிக்க விரும்புவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here