மார்ச் 2 ஆம் திகதியிலிருந்து 8 ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரமாகப் பிரகடனப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தைத் தேசியக் கொண்டாட்டமாகத் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான திட்டங்களைச் செயற்படுத்துவதற்காகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இம்முறை சர்வதேச மகளிர் தினம் ”அனைத்துப் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்காக உரிமைகள், சமத்துவம், வலுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.

அதற்கு இணையாக ‘மாதருக்கு நிலைபேறான எதிர்காலம் – மாதரின் வல்லமையே எமது வழிகாட்டி’ எனும் தொனிப்பொருளில் மார்ச் 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here