மாலம்ப – ஹோகந்தர விஸ்கம் மாவத்தை பகுதியில் 1கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை மகிழுந்தில் மறைத்துக் கொண்டு சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலம்பை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 33 வயதுடைய தம்பதியர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது , காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சாரதியின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here