மித்தெனிய பகுதியில் தந்தை ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் நோக்கித் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் 23 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
நாட்டின் முக்கிய குற்றவாளிகளின் பட்டியலில் அவரது பெயர் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








