கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல்வயலுக்கு போடப்பட்ட மின்குமிழ் வயர், நெல் அறுவடை செய்த பின்பு வயலுக்கு வைக்கப்பட்ட நெருப்பின் மூலம் வயர் அறுந்த நிலையில் குறித்த மின்சாரம் தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here