மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாகவும், தடை இல்லாமல் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்பான சேவைகளை “அத்தியாவசிய சேவைகள்” ஆக அறிவித்த ஜனாதிபதியின் சமீபத்திய சுற்றறிக்கையின் அடிப்படையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவமின்சாரம் ர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அமைச்சர் கூறியதாவது:

“மின்தடையை அனுமதிக்க அரசாங்கம் எந்த நிலையில் இருந்தாலும் தயாராக இல்லை.
இது இப்போது ஒரு அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள நிலையிலுள்ள ஒரு பொது சேவை.
எனவே, இந்த வேலை தொடரப்பட வேண்டும். வேலை செய்ய முடியாவிட்டால் இழப்பீடு பெற்றுச் செல்லலாம், ஆனால் இந்த பணியை தவிர்க்க முடியாது.”

அவர் மேலும் வலியுறுத்தியதாவது:

“இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்காவிட்டால், நாடு எதிர்காலத்தில் மேலும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அதனால், இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகியுள்ளது.”என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here