மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தொலைபேசி கோபுரத்தில் இருந்து மின் உபகரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபர்  ஒருவர் நேற்று (06.10) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 457 அடி நீளமுடைய மின் கம்பிகள் மற்றும் 40 கிலோ உறுக்கிய செப்புகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தே நபர் , மீரிகம, நால்ல, தொம்பே, அத்தனகல்ல, பல்லேவெல, நிட்டம்புவ, கம்பஹா, வீரகுல ஆகிய பிரதேசங்களில் உள்ள தொலைபேசி கோபுரங்களில் இருந்து மின் உபகரணங்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here